பதிவு செய்த நாள்
10
ஜூன்
2022
06:06
க.க.சாவடி: க.க.சாவடியை அடுத்து நவக்கரை, மாவு மில் பகுதியில் சிவகுருநாதர் கோவில் புரைமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சி, 5ல் கணபதி, லட்சுமி, நவகிரக ஹோமங்கள், பர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவற்றுடன் துவங்கியது. தொடர்ந்து வந்த நாட்களில் பக்தி இசை, பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 8:30 மணிக்கு மங்கள இசை, பூர்வாங்க பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜை, தத்துவார்ச்சனை, நாடி சந்தானம் உள்ளிட்டவை நடந்தன. 10:30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும் நடந்தன. இதையடுத்து கோவில் விமானத்திற்கும் தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மேலும் மகா அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, சிவகுருநாதரை தரிசித்து சென்றனர்.