மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2022 12:06
சென்னை, மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெரு விழாவை முன்னிட்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் கோயிலில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ஜூன் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் இன்று ( ஜூன் 11ம் தேதி) காலை 7 மணிக்கு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரில் வெள்ளீஸ்வரர் மற்றும் காமாட்சி அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஜூன் 14ம் தேதி இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.