அனுப்பர்பாளையம்: திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரியில் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்தப்பெருமாள் திருக்கோவில் உள்ளது. கோவிலில், வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. காலை 10.00 மணி முதல் கந்தபெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்தனர். தேரில் வள்ளி தேவசேனா வுடன் கந்த பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியை தொடர்ந்து பகல் 12.00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.