பதிவு செய்த நாள்
04
ஆக
2012
12:08
சிவகிரி : நெல்கட்டும்செவல் வடக்குத்தியம்மன், உச்சினி மாகாளியம்மன், முத்தாலம்மன் கோயில்களில் ஆடிமாத திருவிழா துவங்கியது. நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள வடக்குத்தியம்மன், உச்சினி மாகாளியம்மன், முத்தாலம்மன் கோயில்களில் ஆடிமாத திருவிழா துவங்கியது. அன்று வடக்குத்தியம்மன் கோயிலில் அம்மனுக்கு அலங்கார, அபிஷேக, ஆராதனை நடந்தது. முன்னதாக ஊர் பொதுமக்கள் சார்பில் மாமான்னர் பூலித்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மாலை 6 மணிக்கு உச்சினி மாகாளியம்மன் கோயிலில் தோரணம் கட்டி பொங்கல் சாட்டுதல் நடந்தது. குற்றாலம் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 1 மணிக்கு சாம பூஜை நடந்தது. இரண்டாம் நாள் வாணவேடிக்கை முழங்க பொங்கல் பானைகள் அழைப்பும், மாலை 3 மணிக்கு கிடாய் வெட்டுதலும், 5 மணிக்கு முத்தாலம்மன் கோயிலில் கால்நட்டுதலும் நடந்தது. இரவு சொற்பொழிவு, வில்லிசை நடந்தது. மூன்றாம் நாள் பக்தி சொற்பொழிவும், கிராமிய தெம்மாங்கு பாடல் நிகழ்ச்சியும் நடந்தது. நான்காம் நாளான நேற்று மாலை மஹாபாரத சொற்பொழிவும், கலை நிகழ்ச்சியும் நடந்தது. ஐந்தாம் நாளான இன்று (4ம் தேதி) சிவபுராணம் சொற்பொழிவும், பட்டிமன்றமும் நடக்கிறது. வாசு., எம்எல்ஏ துரையப்பா, யூனியன் சேர்மன் தங்கமாரி, தொகுதி செயலாளர் துரைப்பாண்டியன், துணை சேர்மன் சாமிவேல் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். நாளை (5ம் தேதி) இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நடக்கிறது. 7ம் நாள் மாமன்னர் பூலித்தேவர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் நாள் முத்தாலம்மன் கோயிலில் திருவிழா, இரவு 1 மணிக்கு காட்டு நாயக்கன் தெரு பிள்ளையார் கோயிலில் அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. 9ம் நாள் மாலை 4 மணிக்கு
மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் வழியனுப்பு விழாவும் நடைபெறுகிறது. வரும் 14ம் தேதி வள்ளி திருமணம், ஹரிசந்திர மயான காண்டம் நாடகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தனிநபர் அழைப்பை விரும்பாத ஊர் பொதுமக்கள் சார்பில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.