‘மு’ என்றால் ‘முகுந்தன்’. இது திருமாலைக் குறிக்கும். ‘ரு’ என்றால் ‘ருத்ரனாகிய சிவனைக் குறிக்கும். ‘க’ என்றால் பிரம்மாவைக் குறிக்கும். மும்மூர்த்திகளுக்கும் உள்ள பெயர்களில் முதல் எழுத்துக்களை இணைத்தால் ‘முருக’ என்று வருவதால்...முருகனைக் கும்பிட்டால் மும்மூர்த்திகளின் அருளும் முருகன் மூலமாக நமக்கு வந்து சேரும். இதையே ‘முருகன், குமரன், குகன் என உருகும் உணர்வை தந்தருள்வாய்’ என்கிறார் அருணகிரிநாதர்.
முருகனடியார்கள்:
அகத்தியர்: அடியார்களில் முதன்மையான இவர் பொதிகைமலையில் உபதேசம் பெற்றார். அவ்வையார்: சிறுவனாக வந்த முருகன், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று அவ்வை பாட்டியை சோதித்து அருள்புரிந்தார். நக்கீரர்: திருப்பரங்குன்றத்தில் பூதங்களிடம் சிக்கிய போது திருமுருகாற்றுப்படை பாடலை பாடி உயிர் பிழைத்தார். அருணகிரி நாதர்: வாய் மணக்கும் திருப்புகழ் பாடல்களை பாடியவர் இவர். கந்தரனுபூதி, வேல் விருத்தம் போன்ற நுால்களை இயற்றியுள்ளார்.