திருப்புகழ் என்பது முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்திநுால். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என கணித்திருக்கின்றனர். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நுாலாகவும், முருகன் புகழ்பாடும் நூலாகவும் உள்ளது. திருத்தணியில் பாடப்பட்ட ’இருமல் உரோகம்.. எனத் தொடங்கும் பாடலை ‘மந்திரத் திருப்புகழ்’ என்பர். இதைப் பாடினால் நோய் தீரும்.