முருகப்பெருமானின் மயில் வாகனத்தின் காலடியில் பாம்பு ஒன்று இருக்கும். நாகம் கொல்லப்படுவதில்லை ஆனால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். கருநாகம் உணர்த்துவது ஒருவனுடைய ‘அகந்தையை’. நாகத்தின் விஷம் நாகத்தை எதுவும் செய்வதில்லை. ஆனால் அது வெளிப்பட்டாலோ அதனால் ஏற்படும் ஆபத்து அபாயமானது. அது போல ஒருவருடைய அகந்தை அவருக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் அதனால் துன்பம் எதுவும் இல்லை. அதை வெளிக்காட்டினால் தீய விளைவுகள் ஏற்படும். விஷ ஜந்துவாகிய அகந்தையை காலடியில் போட்டுக் கட்டுப்படுத்தி, புற அழகினிலிருந்து கவனத்தை உட்திருப்பினால் மட்டுமே கடவுளை அறிய முடியும் என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது.