நாயகம் தன் தோழர்களுக்கு கதை ஒன்றைச் சொன்னார். வெயிலில் நடந்து சென்ற மனிதன் ஒருவனுக்கு தாகம் ஏற்பட்டது. தண்ணீர் கிடைக்குமா என தேடிப் பார்த்தான். துாரத்தில் கிணறு ஒன்று தென்பட்டது. இறைக்க வாளி ஏதும் இல்லாததால் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் குடித்தான். கிணற்றை விட்டு மேலே வந்த போது அவன் பார்த்த விஷயம் கவலையளித்தது. நாய் ஒன்று தாகத்தால் ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. உடனே கிணற்றுக்குள் இறங்கிய அவன் சட்டையை தண்ணீரில் நனைத்து வந்து நாயின் வாயில் பிழிந்து விட்டான். இறைவன் அவனுடைய இந்த நற்செயலைக் கண்டு அவனது பாவங்களை மன்னித்தான்.