ஒருநாள் சந்தைக்குச் சென்றார் முல்லா. அங்கு நண்பர்களைச் சந்தித்த போது அதில் ஒருவர், ‘‘எங்கள் சந்தேகத்தை தீர்க்க வேண்டும். ‘உண்மை என்றால் என்ன’ ’’ எனக் கேட்க அதற்கு கேலியாகச் சிரித்தார் முல்லா. ‘‘இது கூடத் தெரியாதா? மனிதர்கள் சிந்திக்க விரும்பாத வார்த்தை இது’’ என்றார்.