பதிவு செய்த நாள்
14
ஜூன்
2022
04:06
அவிநாசி: ஸ்ரீ செல்வவிநாயகர்,ஸ்ரீ மாகாளியம்மன்,ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ரீ கன்னிமார்,ஸ்ரீ கருப்பராயர் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம். ஸ்ரீ செல்வவிநாயகர்,ஸ்ரீ மாகாளியம்மன் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராயர் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முன்னூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். அவிநாசி வட்டம், ஆட்டையாம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வவிநாயகர்,ஸ்ரீ மாகாளியம்மன்,ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ரீ கன்னிமார்,ஸ்ரீ கருப்பராயர் மூர்த்திகளுக்கு, வருகின்ற வெள்ளியன்று காலை 6 மணிக்குமேல் 7:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக பெரு விழா நடைபெறுகின்றது. இதனையடுத்து, முன்னூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, ஊர்வலமாக யாகசாலைக்கு தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து சென்றனர். முன்னதாக, லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன்,ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ரீ கன்னிமார்,ஸ்ரீ கருப்பராயர் மூர்த்திகளுக்கு நேற்று காலை மஹா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. மேலும், 17ம் தேதி நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேக பெருவிழாவை, கூனம்பட்டி திருமடம் ஸ்ரீ சரவண மாணிக்கவாசக சுவாமிகள், சிவஸ்ரீ திருகயிலைமணி அன்புகிருபாகர சுப்ரமணிய சிவாச்சாரியார் மற்றும் குமாரசுப்ரமண்ய சிவாச்சாரியார் முன்னிலையில் நடைபெறவுள்ளது. கும்பாபிசேக விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.