வேண்டவராசியம்மன கோவிலில் கும்பாபிஷேக பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2022 04:06
திருப்போரூர்-திருப்போரூர் அருகே, நெல்லிக்குப்பம் வேண்டவராசியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் துவங்கின.திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில், புகழ்பெற்ற வேண்டராசியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் வரும் 17ம் தேதி, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது.இதையொட்டி, இன்று மாலை 5:00 மணிக்கு முதல் யாகசாலை பூஜைகளான கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழா ஏற்பாடுகளை, வேண்டவராசி சேவா அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.