சமத்துவத்தை போற்றும் கோவில் திருவிழா : பக்தர்களுக்கு அசைவ விருந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2022 08:06
திருமங்கலம்: திருமங்கலம் அருகே சமத்துவத்தை போற்றும் வகையில் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
திருமங்கலம் அருகே தங்களாசேரியில் சடையாண்டி சுவாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு இங்கு அனைத்து பிரிவு மக்களும் கொண்டாடும் திருவிழா விமர்சையாக நடைபெறும். இதில் குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக வேண்டிக்கொண்டு நிறைவேறிய பின்பு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய ஆடுகள் வெட்டப்பட்டு சாமிக்கு படையலிட்டு, அனைவருக்கும் அசைவ விருந்து பிரசாதம் வழங்கப்படும். நேற்று நடந்த திருவிழாவில் 70க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு அசைவ விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தங்களாசேரி, அம்மாபட்டி, பொக்கம்பட்டி உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.