பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.80 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2022 08:06
பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. ஒரு கோடியே 80 லட்சத்து 31 ஆயிரம் கிடைத்துள்ளது.
பழநி மலைக்கோயிலில் நேற்று (ஜூன்.14 ல்) உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காணிக்கையாக 1,121 கிராம் தங்கமும், 19 ஆயிரத்து 317 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. ஒரு கோடியே 80 லட்சத்து 31 ஆயிரத்து 420 ,மற்றும் 131 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் உண்டியல் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் 4 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். உண்டியல் பணிக்கு வரும் ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்து வரவேண்டும். அனைவரும் முறையான அடையாள அட்டைகள் அணிந்து வரவேண்டும். மேலும் உணவு இடைவேளை செல்லும் நேரம் குறித்து பதிவிட வேண்டும். என கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்தார்.