ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள பானகல் பகுதியில் வீற்றிருக்கும் கங்கை அம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபடுவதோடு தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தி வந்தனர். சேவல் , ஆடு போன்றவற்றை பலி கொடுத்தும் பொங்கலிட்டும், கூழ் ஊற்றியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இதேபோல் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் பானகல் கங்கை அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு மற்றும் உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள் நான்கில் பகுதியில் உள்ள பொன்னாலம்மன் கோயில் அருகில் இருந்து கங்கை அம்மன் கோயில் வரை ஊர்வலமாக மேளதாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க தலைமீது சுமந்து வந்து கங்கை அம்மனுக்கு வழங்கியதோடு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.