கமுதி கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திகடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2022 10:06
கமுதி: கமுதி அருகே வ.மூலைக்கரப்பட்டி கிராமத்தில் குங்கும காளியம்மன், சுந்தரராஜ பெருமாள், செல்வவிநாயகர், கருப்பணசாமி கோயிலில் பூக்குழி விழா நடந்தது. இதனைமுன்னிட்டு கடந்த ஒருமாதமாக பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். காலை 7 மணிக்கு அக்கினி சட்டி,பால்குடம் எடுத்து வந்தனர். மாலை 5 மணிக்கு கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்த பக்தர்கள் வேல்குத்தி,பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். கோயில் முன்பு கிராமமக்கள் பொங்கல் வைத்தனர்.மூலவரான குங்கும காளியம்மன் பால், சந்தனம், பன்னீர், மஞ்சள் உட்பட 17 வகையான அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு 108 விளக்குபூஜை நடந்தது. கமுதி சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.