நத்தம் முளையூர் நல்லராவான் என்ற கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2022 05:06
நத்தம், நத்தம் அருகே உள்ள முளையூர் நல்லராவான் என்ற கூத்தாண்டவர் சுவாமி கோவில் திருவிழா அதிர்வேட்டுகள் மற்றும் வண்ணக் கலர் வாணவேடிக்கையுடன் நடந்தது.
விழாவையொட்டி ஜூன் 11 பெருமாள் சுவாமி மலையிலிருந்து எழுந்தருளி ஊர் பார்த்து கோயிலுக்கு வந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு காட்டுமாட்டு வேடிக்கை, கரடி கூத்து போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்தது.தொடர்ந்து நல்லறாவன் என்று கூத்தாண்டவர் சுவாமி மடப்பள்ளியில் இருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பூச்சப்பரத்தில் எழுந்தருளி, மேள தாளம் முழங்க பக்தர்கள் ஆராவாரத்துடன் கோவிலுக்குச் சென்றது. பின்னர் அதிர்வேட்டுகள் மற்றும் வண்ண கலர்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய வாணவேடிக்கைகள் இரவு 11மணிக்கு தொடங்கி அதிகாலை வரை விடிய , விடிய நடந்தது. நேற்று திருவிழாவில் சுவாமி கழு சுற்றிப் பார்க்கும் காட்சியும், பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் சுவாமிக்கு செலுத்தினர் .அதனைத் தொடர்ந்து கோவில் அருகில் உள்ள கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. இவ்விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.