மேட்டுப்பாளையம்: படியனூர் கிராமத்தில் உள்ள, மிகவும் பழமை வாய்ந்த அம்சியம்மன் கோவிலில், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
காரமடை அருகே படியனூரில் மிகவும் பழமைவாய்ந்த, அம்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிறப்பு பூஜை, விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. பழநி ஆண்டவருக்கு வழிபாடு செய்த பின்பு, அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் அம்சியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிபாட்டின் போது, மாகாளியம்மன் மற்றும் கிராம தெய்வங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.