வாலாஜாபாத்:காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை ஊராட்சியில், வள்ளுவப்பாக்கம் கிராமம் உள்ளது.
இங்கு, மனோன்மணி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் செல்வ விநாயகர், மாரியம்மன், பொன்னியம்மன், படவேட்டம்மன் ஆகிய கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.கடந்த 13ம் தேதி காலை 7:00 மணி அளவில் புதிய சிலைகளுக்கு கரிக்கோல நிகழ்ச்சி நடந்தது. 15ம் தேதி மாலை சிவபுராண தமிழிசை பாடல்கள் மற்றும் சென்னை கானாவா?கிராமிய தெம்மாங்கா என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடந்ததுநேற்று காலை 8:00 மணி அளவில் கலச புறப்பாடு,8:40 மணிக்கு தான்தோன்றீஸ்வரர் ராஜகோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் மஹா கும்பாபிஷேகம் நடத்தினர்.