பதிவு செய்த நாள்
24
ஜூன்
2022
04:06
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், தியாகிவடிவேல் நகரில் புதிதாக கட்டப்பட்ட சீரடி குபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில், புதிதாக சீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு, நேற்று மாலை 6:00 மணிக்கு கோபுர கலச ப்ரதிஷ்டை, மூலவர் அஷ்டபந்தனம் சாற்றுதல், இரவு 7:00 மணிக்கு ருத்ர சாந்தி ஆதித்தியாதிகள், காலபைரவர், மாருதி, தத்ரேயந் சீரடி சாய் ஹோமங்கள், மகா தீபாராதனை நடந்தது.
கும்பாபிஷேக தினமான இன்று அதிகாலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு அஸ்வந்த் கால பூஜை, தன்வந்சந், வருனந்சந் ஹோமங்கள், மகா பூர்ணாஹுதி, 9:00 மணிக்கு கலசம் புறப்பாடாகி, 10:30 மணிக்கு மூலவர் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகி சுப்பு தலைமை தாங்கி, வரவேற்றார். செயலாளர் பாலாஜி, பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர்கள் முரளி, முகில்வண்ணன், நகராட்சி தலைவர் முருகன், நகரமன்ற உறுப்பினர்கள் துரைராஜன், கோவிந்து ஜூடியாக் குழும நிறுவனர் தியாகராஜன், பா.ம.க., நகர செயலாளர் சரவணன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் ஆதன்ரவி, அன்னபூர்ணா எலக்ட்ரிக்கல் மாணிக்கசாமி, ஜி.கே.எஸ்., டிரேடர்ஸ் கிருஷ்ணகுமார், சந்தோஷ்குமார், வழக்கறிஞர் ராதா, ராமச்சந்திரன், இளங்கோவன் உள்ளிட்ட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.