கவுமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2022 06:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் கவு மாரியம்மன் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு மஞ்சள் பொடி, பால், தேன், பன்னீர் உட்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேம் நடந்தது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் ஜூலை 19 மாவிளக்கு உற்சவமும் மறுநாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்து அம்மனை வழிபடுகின்றனர். டி.எஸ்.பி., முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் மீனாட்சி, தென்கரை வர்த்தகசங்க தலைவர் சிதம்பரசூரியவேலு, மண்டகபடிதாரர்கள் சீதாராமன், ஜோதிசாமி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.