Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகல் தீப விளக்கு வழிபாடு சத்குரு சாய் பாபா கோவிலில் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா சிறப்பாக கொண்டாடப்படும்: அமைச்சர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2022
03:07

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரைவிழா சிறப்பாக கொண்டாடப்படும் அமைச்சர் சிவசங்கர் தகவல் பெரம்பலுார்,ஜூலை.15- கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அன்று அரசு விழாவாக கொண்டாட சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அரியலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுலாத் துறை சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: தஞ்சையில் மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் சதய விழா கொண்டாடப்படுவது போல, பல அயல்நாடுகளை வென்று தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்தியவரும், கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயிலை கட்டியவரும், அரியலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்டத்தில் பல நகரங்கள் கிராமங்களை உருவாக்கியவருமான ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அன்று அரசு விழாவாக கங்கைகொண்ட கங்கைகொண்டசோழபுரத்தில் ஜூலை 26 ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதன் மூலம் வரும் ஆண்டுகளில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் விழாவிற்கு தொடர்ந்து வருவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே, ஆடி திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மாவட்ட நிலை அலுவலர்கள் ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை அனைவருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அரியலுார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மேம்படுத்தி பொதுமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும், மாமன்னர் ராஜேந்திர சோழனின் சிறப்பை வருங்கால சந்ததியினர் அறிந்து பயன் பெறும் வகையிலும் கங்கைகொண்ட சோழபுரம்,கரைவெட்டி பறவைகள் சரணாலயம், பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள சாத்தனுார் கல்மரம், தொல்லியல் ஆய்வகம் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றார்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar