பதிவு செய்த நாள்
11
ஆக
2012
11:08
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில், 90 அடி உயரத்தில் புதிய ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட உள்ளது.சென்னையில் உள்ள நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க சிறப்புக் கூட்டம் நடந்தது. லங்கால் லிங்கம் தலைமை வகித்தார். சென்னை சுயம்புலிங்க சுவாமி பக்த சேவா சங்கம் சார்பில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. இதில் தலைவராக முருகேசன், செயலாளராக வெள்ளையா, பொருளாளராக செண்பகவேல் தேர்ந்தெடுக்கப் பட்டனர். உவரி கோயிலில் 90 அடி உயரத்தில் 7 நிலைகளுடன் புதிய ராஜகோபுரம் நிர்மாணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெல்லை- தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் பத்மநாபன், வடிவேல்முருகன், புகழும்பெருமாள், சண்முகவேல், பெருமாள், லிங்கபாண்டி செண்பகவேல், சுயம்புநாதன், மார்த்தாண்டன், சுபாஷ், கந்தசாமி ராஜா, கனகலிங்கம், சுந்தர் கலந்து கொண்டனர்.