திருவாரூர்: இந்தியாவின் முக்கியப்பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணி திருவிழாவிற்கு திருவாரூர் வழியாக 67 ரயில்கள் முதல் முறையாக இந்த ஆண்டு இயக்கப்பட உள்ளது என்று திருச்சி கோட்ட மேலாளர் மஞ்”ளா ரங்கராஜன் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் கம்யூட்டர் மூலம் முன்பதிவு மையம் துவக்க விழா மற்றும் ஆய்வுப்பணிகள் நடந்தது. கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பிரசாத், இந்திய பருத்தி அபிவிருத்தி அங்கீகாரக்குழு உறுப்பினர் கலைவாணன் முன்னிலை வகித்தனர். நாகை எம்.பி., விஜயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முன்பதிவு மையத்தை துவக்கி வைத்து ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் மஞ்சுளாரங்கராஜன் தலைமை தாங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,"வேளாங்கண்ணி திருவிழா இம்மாதம் 28ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடக்கிறது. இப்பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்ல வசதியாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து முதல் முறையாக 67 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அத்துடன் திருச்சியில் இருந்து டெமோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் நாகூர்- சென்னைக்கு கம்பன் ரயில் அக்டோபர் மாதம் 11ம் தேதியில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் என்றார். இந் நிகழ்ச்சியில் திருவாரூர் தி.மு.க., மாவட்ட செயலர் பூண்டிகலைவாணன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.