* சூரியன் எழுவதற்கு முன், நீ எழுந்து தியானம் செய். * கடவுளின் பெயரைச்சொல்லி உயிர்ப்பலி கூடாது. * அளவாக சாப்பிடு. பசி இல்லையென்றால் சாப்பிடாதே. * உன்னை நம்பியவர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாதே. * நல்லவர்களின் மனதை நடுங்கச் செய்யாதே. * வாழ்க்கைக்கு பணம் தேவையாக இருந்தாலும், அதை நல்ல வழியில் தேடு. * உன்னிடம் உதவி கேட்டு வருபவரிடம் மென்மையாக நடந்து கொள். * ஒருவரது வயிற்றை பசி என்னும் நெருப்பு எரிக்கும்போது, அதை உணவால் அணைத்திடு. * ஏழை, பணக்காரர் என்று யாரையும் ஏளனம் செய்யாதே. * மாலை வெயில் உடலில் படும்படி சிறிது நேரம் நிற்க வேண்டும். * புண்ணியம் செய்வதற்கு முதலில் கஷ்டமாகவும் பிறகு சுகமாகவும் இருக்கும். * உண்மையைச் சொல். அது உன் வார்த்தையை பாதுகாக்கும். * மனம், வாக்கு, செயல் ஆகியவை ஒரே மாதிரியாக இருக்கட்டும். * அன்பு இருக்கும் இடத்தில் கடவுள் இருப்பார். * கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் வேண்டாம்.