* அன்பின் மூலம் உலகத்தை சொந்தமாக்குங்கள். * தினமும் தியானம் செய். மனதில் நல்ல எண்ணம் உருவாகும். * கடவுள் நாமத்தை சொல். மனம் துாய்மை பெறும். * எதிர்பாராத நேரத்தில் கூட ஒருவருக்கு கடவுளின் அருள் கிடைக்கலாம். * ஒருவரின் கர்மபலன் முடிந்த உடனேயே கடவுளின் காட்சி கிடைக்கும். * நன்மையால் இன்பமும், தீமையால் துன்பமும் ஏற்படுகிறது. * கங்கை கரையில் வசிப்பவர்கள் தேவர்கள். ஏனெனில் அவர்கள் தினமும் கங்கையில் நீராடுகிறார்கள். * அங்கும் இங்கும் ஓடுவதுதான் மனதின் இயல்பு. அதைக் கட்டுப்படுத்து. * நீ எதை மதிக்கிறாயோ, அதுதான் உன்னையும் மதிக்கும். * பெண்களின் சிறந்த ஆபரணம் நாணப்பண்பாகும். * மனதில் கருணை கொண்டவனே உண்மையான மனிதன். * ஒருவருக்கு மரணம் எப்போது வரும் என்று தெரியாது. எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நல்லதை செய். * மரணத்தை கண்டு மனிதன் அழுகிறான். மகானோ சிரிக்கிறார். * நீ செய்த நல்ல, தீய செயல்கள் மரணத்திற்கு பிறகும் உன்னை தொடரும். * கடவுளிடம் சரணடைந்தால் பாவம் தீரும்.