பதிவு செய்த நாள்
24
ஜூலை
2022
02:07
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
108 வைணவ தளங்களில் ஒன்றானதும், தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்ட ஆண்டாள் கோயிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூர பெருவிழா மற்றும் திருத்தேரோட்ட வைபவம் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இவ்வாண்டும் இவ்விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு காலை கொடி பட்டம் மாட வீதிகள் மற்றும் ரத வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கோயில் கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பாலாஜி பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். அப்போது அங்கு திரண்டு இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா, கோபால கோஷத்துடன் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தனர்.
விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோயில் பட்டார்கள் பங்கேற்றனர். தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதி புறப்பாடும் நடக்கிறது. கோயில் ஆடிப்பூர கொட்டகையில் மதியம் ஒரு மணி முதல் இரவு 10:00 மணி வரை பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகள், இசைக் கச்சேரிகள் நடக்கிறது. 5ஆம் திருநாளான ஜூலை 28 காலை 10 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 10 மணிக்கு 5 வருட சேவையும், ஏழாம் திருநாளான ஜூலை 30 அன்று இரவு 7 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் சயன சேவையும், ஒன்பதாம் திருநாளான ஆகஸ்ட் 1 அன்று காலை 9:05 மணிக்கு திருத்தேரோட்டமும், பனிரெண்டாம் திருநாளான ஆகஸ்ட் 4 அன்று மாலை 6 மணிக்கு புஷ்ப யாகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.