முன் செய்த வினைகளுக்கு ஏற்பவே நாம் பிறவி எடுக்கிறோம். இதற்கு ஏற்றாற்போலவே ஒருவருக்கு யோகம், தோஷம் ஆகியவை அமையும். அதிலும் ஒருவருக்கு ‘பித்ரு தோஷம்’ இருந்தால், அவர் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர கஷ்டப்பட வேண்டியிருக்கும். திருமணத் தடங்கல், குழந்தைப்பேறு வாய்ப்பதில் தாமதம், மருத்துவச் செலவு, வேலை கிடைப்பதில் சிரமம் என ஏதாவது பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். இந்த தோஷத்திற்கு முக்கிய காரணம் பல காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியாமானது கடமை. கடமைக்கும் தோஷத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்க வேண்டாம். தந்தை, தாய் ஆகியோரை காக்க வேண்டியது ஒரு மகனின் கடமை. அதாவது அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் அவர்களை கஷ்டப்படுத்தினால் பித்ரு தோஷம் ஏற்படும். இது பல சந்ததிகளையும் தாக்கும். பெற்றோருக்கு உதவியாக இருந்தாலே, ஒருவருக்கு சகல பாக்கியமும் கிடைத்துவிடும்.