Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடமை.. அது கடமை! அன்றாட வாழ்வில் ஆத்திச்சூடி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கனவெல்லாம் பலிக்கும்! கண் முன்னே நடக்கும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2022
04:07


ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெவ்வேறு அனுபவங்கள். பலரும் வெவ்வேறு பாதையில் பயணிக்கிறார்கள். இந்த வேறுபாடும், வித்தியாசமும் மட்டும் தான் வாழ்க்கையின் அலாதி சுவாரஸ்யமே.. அந்த சுவாரஸ்யம் பலருக்கு பயமாகவும், சிலருக்கு ஜயமாகவும் மாறிவிடுகிறது. இதற்கு என்ன காரணம் மனம். ஆமாம்.. மனம்தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம். மனம் உங்களை வென்றால் பயம். நீங்கள் மனதை வென்றால் ஜயம். சரி மனதை எப்படி வெல்வது.. யாரிடம் கேட்பது.. என தயங்காதீர்கள். நாமக்கல் சேந்தமங்கலத்திற்கு வாருங்கள். அங்கு வீற்றிருக்கும் சோமேஸ்வரரிடம் கேளுங்கள். உங்களின் கனவெல்லாம் ஒவ்வொன்றாய் பலிக்க ஆரம்பிக்கும்.
கோயிலின் உள்ளே நுழையும்போதே வேரும், விழுதுமாகப் படர்ந்த மரங்கள், பசுஞ்செடிகளை காணலாம். அதற்கு சற்று மேலே பார்த்தால் மரங்கள் முழுவதும் பறவைகள் தன் குடும்பத்துடன் கொஞ்சி விளையாடும் காட்சி. இதுவே உங்கள் மனதில் தன்னம்பிக்கையை நிரப்பிவிடும். இப்படி கொடிமரம், 8 துாண்களுடன் கூடிய மண்டபத்தை கடந்தால் சோமேஸ்வரர் தரிசனம். எந்த விதமான கூச்சல், தள்ளுமுள்ளு இல்லாமல் அவருடன் நீண்ட நேரம் பேசலாம். அவரும் உங்களுடன் பேசுவார். பிரச்னைகளை தீர்ப்பார். திங்களன்று இவரை தரிசியுங்கள். மனம் உங்களுக்கு கட்டுப்படும்.
நாம் நின்று தரிசிக்கும் இடத்திலேயே சூரியன், சந்திரன் இடையே சனீஸ்வர பகவான் நிற்கிறார். அவர் ஏன் அப்படி நிற்கிறார் என்றால்.. எதிரே நவக்கிரக சன்னதி உள்ளது. அதில் உள்ள சனீஸ்வரரும், இவரும்  நேருக்கு நேர் பார்ப்பதால், பக்தர்களுக்கு சனிபகவானால் ஏற்படும் தோஷம் நிவர்த்தியாகும்.
வெளிப்பிரகாரத்தில் 63 நாயன்மார்களுடன் 9 தொகையடியார்களும் உள்ளனர். அவர்களுக்கே அருகே வில்வமரம் ஸ்தலவிருட்சமாக உள்ளது. அதற்கு பின் கன்னிமூலை மகாகணபதி, முருகனை பார்வையிடலாம். பழமையான இக்கோயிலில் எத்தனையோ மகான்கள் வந்திருப்பர். இங்கு நாம் வருவதால், அவர்களின் ஆசியும் கிடைக்கலாம் அல்லவா.   
––––
எப்படி செல்வது: நாமக்கல் பஸ்ஸ்டாண்டில் இருந்து 13 கி.மீ., 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar