யாத்திரைக்கு சென்ற குருவும், அவரது சீடர்களும் வீதி வழியாக ஆசிரமத்திற்கு வந்தனர். அப்போது வீடு கட்டுவதற்கு செய்யப்பட்டிருந்த சாரம் சரிந்து அவர்களது மீது விழுந்தது. இதனால் அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் அவர்கள் வீட்டு உரிமையாளரிடம் கோபிக்காமல் இருப்பிடம் வந்தனர். காயத்திற்கு மருந்தும் போட்டுக் கொண்ட சீடர்களுக்கு சந்தேகம். ‘‘குருவிடம் அந்த வழியாக வரவில்லை என்றாலும் காயம் ஏற்பட்டிருக்குமா’’ என கேட்டனர். அதற்கு அவரோ நெருஞ்சி முள் மீது வாழை இலை பட்டாலும், வாழை இலை மீது நெருஞ்சி முள் பட்டாலும் நஷ்டம் வாழை இலைக்குத் தான். அது போலே அவரவர் செய்த வினைப்படியே எல்லாம் அமையும். வேறு வழியாக வந்திருந்தாலும் இதைவிட பெரிய காயம் ஏற்பட்டால் நிலைமை என்ன என்பதை யோசியுங்கள் என்றார் குரு. நடப்பதை எண்ணி அமைதி காக்க வேண்டும் என நினைத்த சீடர்கள் கலைந்து சென்றனர்.