* பிறந்த வீட்டு சுதந்திரத்தை புகுந்த வீட்டில் நுாறுசதம் எதிர்பார்க்காதீர்கள். * கணவருக்கு விருப்பு, வெறுப்பு தரும் விஷயங்களை புரிந்து கொள்ளுங்கள். * எதிர்பார்ப்பு இப்போதே நிறைவேற வேண்டும் என பிடிவாதம் செய்யாதீர்கள். * மற்றவர் முன்னிலையில் கணவரை விட்டுக் கொடுக்காதீர்கள். * பிறருடன் கணவரை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். * தோழி அல்லது அண்டை வீட்டாரிடம் கணவரை குறை சொல்லாதீர்கள். * குழந்தைகளின் முன் சண்டையிடாதீர்கள். அப்படி வந்தாலும் ஒருநாளைக்கு மேல் சண்டையை வளர விடாதீர்கள். * கணவரின் கருத்துக்களை காது கொடுத்து கேளுங்கள். * இனிய சந்தர்பங்களில் அன்பை வெளிப்படுத்தும் போது பரிசளிக்க தவறாதீர்கள். * பெற்றோர், குழந்தைகளின் முன்னிலையில் கணவருக்கு முக்கியத்துவம் கொடுங்கள். * தவறு நேரும் போது மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். * உடை, அலங்காரத்தில் எளிமை, நேர்த்தியை பின்பற்றுங்கள். * ஆண்டுக்கு ஒருமுறையாவது கணவருடன் சுற்றுலா செல்லுங்கள். * அந்தரங்க விஷயங்களில் பிறரது தலையீட்டை அனுமதிக்காதீர்கள். * கணவரை திருத்துவதாக எண்ணி அடிக்கடி அறிவுரை சொல்லாதீர்கள்.