மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே, சென்னம்பாளையத்தில் உள்ள எமதர்மர் கோவிலில், ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை 8 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு எமதர்மருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை செய்யப்பட்டது. கோவில் பூசாரி கந்தசாமி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர். * ஆடி அமாவாசை முன்னிட்டு, முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சிகள், பவானி ஆற்றின் கரையோரம் நடந்தன. அதேபோன்று மேட்டுப்பாளையம் நகராட்சி நந்தவனத்தில், தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணமும், திதியும் வழங்கினர்.