சாணாங்காளி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா : பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2022 03:08
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள சாணாங்காளி அம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் இன்று பால்குடம் எடுத்தும் தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மெய்யப்பன் அம்பலம் தெருவில் உள்ள சாணாங்களி அம்மன் கோயில் 29 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கடந்த ஜூலை 28 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று பக்தர்கள் முத்தாலம்மன் கோயிலில் இருந்து கோயில்கரகம், மதுக்குடம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதி வழியாக கோயிலை வந்தடைந்தனர். ஆடிப்பெருக்கான இன்று பக்தர்கள் பால்குடம், அக்னிச் சட்டி, வேல்காவடி, பறவைக் காவடி எடுத்தும் தீ மிதிக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.