திருப்பதி: திருமலையில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதம் பிறந்தது முதல் ஆடிப்பூரம், நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, ஆடிப் பெருக்கு, வரலட்சுமி விரதம் என பண்டிகைகள் தொடர்ச்சியாக வந்ததால், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தர்ம தரிசனத்திற்கும் தற்போது மூன்று முதல் நான்கு மணிநேரம் மட்டுமே தேவைப்படுகிறது. விரைவு தரிசன பக்தர்களும் எளிதாக தரிசனத்திற்கு சென்று திரும்புகின்றனர். நேற்று முன்தினம் 69 ஆயிரத்து 628 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். உண்டியல் வாயிலாக 4 கோடியே 11 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.