Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி வெள்ளி பூஜை : அம்மன் கோவில்களில் ... தங்ககவச அலங்காரத்தில் சித்தி விநாயகர் அருள்பாலிப்பு தங்ககவச அலங்காரத்தில் சித்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி வரதராஜ பெருமாள் கோயிலில் வரலட்சுமி விரத பூஜை
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி வரதராஜ பெருமாள் கோயிலில் வரலட்சுமி விரத பூஜை

பதிவு செய்த நாள்

05 ஆக
2022
06:08

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணைக் கோயிலான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ சுவாமி கோயில் வளாகத்தில் சமுதாய (பெண் பக்தர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து) ஸ்ரீ வரலட்சுமி விரத பூஜையை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.


இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிவன்  கோயில் அதிகாரிகள் மற்றும் கோயில் அறங்காவலர் குழுவினர் மேற்பார்வையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்தனர். முன்னதாக அம்மனை வரலட்சுமி ஆக சிறப்பு மலர்களாலும் அணிகலன்களாலும் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு  அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .இதனைத் தொடர்ந்து  பெண் பக்தர்கள் தங்களுடன் கொண்டு வந்துள்ள வரலட்சுமி நோன்பு பூஜை பொருட்களைக் கொண்டு வரதராஜ சுவாமி கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  மண்டபத்தில் கலச ஏற்பாடுகள் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். கோயில் வேத பண்டிதர்கள் வரலட்சுமி விரத கதையை படிக்க அனைவரும் பக்தி பரவசத்துடன் கதையைக் கேட்ட பின் வரலட்சுமியை வழிப்பட்டனர். பின்னர் நோன்பு கயிறுகளை ஒருவருக்கொருவர் கட்டிக் கொண்டதுடன் தங்களின்  கணவர்மார்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும் என்றும்  தீர்க்க சுமங்கலையாக இருக்க வரம் வேண்டிய வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டனர் .இந்த விரத பூஜையில் காலை முதல் மாலை வரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இச்சிறப்பு பூஜையில்  ஈடுபட்டனர் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து பூஜையில்  ஈடுபட்ட பெண் பக்தர்களுக்கு  சிவன் கோயில் சார்பில் தாம்பூலம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 84.48 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராமங்கள் உள்ளது. இங்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை முத்தாலம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar