ஓவியத்தின் மீது ஈடுபாடு கொண்ட பெண் பல்வேறு ஓவியங்களை வாங்கி குவிப்பாள். ஒருநாள் வீட்டிற்கு வந்த தோழியிடம், ‘குழந்தையுடன் இருக்கும் தாய், தோகை விரித்தாடும் மயில்’ என்னும் பத்தாயிரம் மதிப்பு மிக்க ஓவியத்தை காண்பித்தாள். ‘‘லட்ச ரூபாய் மதிப்புள்ள என்னுடைய முத்துமாலைக்கு இது ஈடாகுமா’’ எனக்கேட்டாள். அதற்கு அவள், ‘‘முத்துமாலை இயற்கையானது. ஆனால் ஓவியத்தில் இயற்கையை உருவாக்கும் மனிதனின் திறமை மதிப்பு மிக்கது’’ என்றாள். எதற்கு மதிப்பு அதிகம் என்பதை உணர்ந்தாள் தோழி.