மேட்டுப்பாளையம் முனீஸ்வரர் கோவிலில் உற்சவ பெருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2022 08:08
மேட்டுப்பாளையம்: முனீஸ்வரர் கோவில் உற்சவ பெருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில், மைக்கண் மாரியம்மன் கோவில் அருகே, முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின், 22ம் ஆண்டு உற்சவ பெருவிழா கடந்த, 2ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. ஒன்பதாம் தேதி இரவு, சாமிக்கு படைக்கும் அனைத்து உலோக பூஜை பொருட்களையும், பவானி ஆற்றில் சுத்தம் செய்து, அங்கிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்பு முனீஸ்வரருக்கு அலங்கார பூஜை செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கவுன்சிலர் உமாமகேஸ்வரி மூர்த்தி மற்றும் விழா கமிட்டி என ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.