எம்.குன்னத்தூரில் ஸ்ரீஅம்மன் அய்யனார் கோவிலில் சாகைவார்த்தல் திருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2022 05:08
உளுந்தூர்பேட்டை: எம்.குன்னத்தூரில் ஸ்ரீஅம்மன் அய்யனார் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி சாகைவார்த்தல் திருவிழா நேற்று நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா எம்.குன்னத்தூரில் ஸ்ரீஅம்மன் அய்யனார் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி சாகைவார்த்தல் திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி குன்னத்தூர் மலையில் உள்ள அம்மனை அலங்கரித்து அழைத்து வந்து ஊருக்குள் உள்ள கோவிலில் வைக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து சுவாமியை தங்க நகைகளால் அலங்காரம் செய்தனர். அதனை தொடர்ந்து சுவாமி ஊர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப ஆடுகளை பலியிட்டனர். பலர் தங்க நகை மற்றும் பணம் மாலையாக அணிவித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். வரும் 14ம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது.