முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் பூக்குழி உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2022 04:08
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் 46ம் ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று காலை முதுகுளத்தூர் முருகன் கோயிலில் இருந்து காந்திசிலை, பஸ் ஸ்டாண்ட், வடக்கூர் உட்பட முக்கிய வீதிகளில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகுவேல் குத்தி, பறவை காவடி, அக்கினி சட்டி, பால்குடம் எடுத்து கோயில் முன்பு பூக்குழியில் இறங்கினர். மூலவரான செல்லிஅம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினார். பொதுமக்கள் பூத்தட்டு எடுத்துவந்து சிறப்புபூஜைகள் செய்தனர். இரவு 7 மணிக்கு தெருக்களின் முக்கிய விதிகளில் பூப்பல்லாக்கு வீதி உலா வந்தது. பூச்சொரிதல் விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.