பதிவு செய்த நாள்
12
ஆக
2022
04:08
சூலூர்: குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் பூணூல் அணியும் விழா நடந்தது. சூலூர் அடுத்த குமாரபாளையத்தில் உள்ள, ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பழமையானது. தேவாங்க செட்டியார் சமுதாய மக்களின் குலதெய்வமாகிய இக்கோவிலில் நேற்று ஆவணி அவிட்ட விழா நடந்தது. காலை, 9:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பூணூல் அணியும் விழா நடந்தது. அதன் பின் கத்தி போடும் விழா நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோல், செங்கத்துறை, சோமனூர், செகுடந்தாளி, கருவேலங்காடு, செம்மாண்டாம்பாளையம், கோத பாளையம், செல்லப்பம்பாளையம், வாகராயம்பாளையம், சென்னப்ப செட்டி புதூர், சந்திரா புரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள தேவாங்க சமுதாய மக்கள் பக்தி சிரத்தையுடன் பூணூல் அணிந்து வழிபாடுகள் செய்தனர்.