திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த சொரையப்பட்டு கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த சொறையப்பட்டு கிராமத்தில் பழமையான பெரியாண்டவர் கோவில் உள்ளது. இவ்வளாகத்தில் உள்ள பெரியாண்டவர், பூரணி பொற்களை சமேத ஐயனார், சப்த கன்னிமார், பெரியாயி கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. பூர்ணாகதி நிறைவடைந்து கலசம் புறப்பாடாகி 10:30 மணிக்கு மூல கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து பெரியாயி அம்மனுக்கு பூஜைகள் செய்தனர்