பதிவு செய்த நாள்
13
ஆக
2022
04:08
மதுரை, மதுரை மேலக்கால் மெயின் ரோடு கோச்சடையில் மயில்வேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புதிய 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், ஷஷ்டி மண்டபம் அமைத்தும், விநாயகர், ஆஞ்சநேயர், தட்சனாமூர்த்தி, லட்சுமி ஹயக்கீரிவர், ஜயப்பன், எல்லாம் வல்ல சித்தர், துர்க்கா தேவி, நவகிரஹ சந்நிதிகளுடன் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள பார்வதி பரமேஸ்வரர், வைரவர், மயில்வேல் முருகன் கோபுரங்கள் புனரமைக்கப்பட்டு, வரும் 1.09.2022 வியாழக்கிழமை காலை 8.00 மணிமுதல் 9.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு, 28.08.22 ஞாயிறு இரவு 6.00 மணிக்கு மேல், கணபதி பூஜை, சங்கல்பம், கலச பூஜை, புண்யாகவாசனம், வாஸ்து பூஜை, அனுக்ஞை, காப்பு கட்டுதல், பாலிகா பூஜை, ஆச்சார்யவர்ணம், கலாஆகர்ஷணம், முதல் கால பூஜை நடைபெறுகிறது.
29.08.22 திங்கள் காலை 8.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் ஆரம்பம்
30.08.22 செவ்வாய் அன்று நான்காம் கால பூஜை மற்றும் ஐந்தாம் கால பூஜைகள் ஆரம்பம்
31.08.22 புதன் அன்று ஆறாம் கால பூஜை மற்றும் ஏழாம் கால பூஜைகள் ஆரம்பம்
01.09.22 வியாழன் காலை 6.00 மணிக்கு ஸ்பர்ஸாஹீதி, பூர்ணாஹீதி, வேதபாராயணம், மஹா தீபாராதனை, யாத்ராதானம் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 8.00 மணிமுதல் 9.15 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. காலை 11.15 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மயில்வேல் முருகன் கோயில் டிரஸ்டிகள் செய்து வருகின்றனா்.
பக்தர்கள் தொடர்புக்கு:
R.சுவாமிநாதன் – 9500465786, V.கிருஷ்ணமூர்த்தி – 98427 10137, தேவதாஸ் – 99524 55704, V. கணேசன் – 95003 44650, T.சங்கரநாராயணன் குருக்கள் – 97901 27961 ஐ தொடர்பு கொள்ளலாம்.