உலகிற்கு ஒளியையும் வாழ்வையும் தருபவர் சூரியபகவான். இயற்கையில் இவரே முதன்மையானவர். பண்டைக்காலம் முதலே இவரை முழுமுதற்கடவுளாக வணங்கியுள்ளனர். சூரிய வழிபாடு உலகெங்கும் இருந்தது என்பதை எகிப்திய, கிரேக்க, சுமேரிய நாகரிகங்கள் எடுத்துச் சொல்கின்றன. அதில் சூரியபகவான் ஒளியாக திகழ்கின்றார். அவரது தலைமுடி தங்கக் கதிர்களில் சுருண்டு கிடக்கிறது. ஒருபோதும் வெட்டப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.