கெங்கை அம்மன் கோவிலில் பக்தர்கள் அலகு குத்தி வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2022 10:08
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் மேலவீதி, கெங்கைஅம்மன் கோவில் ஆண்டு திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அலகுகள் குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருக்கோவிலூர், மேலவீதியில் உள்ள பழமையான கங்கை அம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இதன் நிறைவாக நேற்று காலை 7:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு, வேண்டுதல் உள்ள பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், தேர் இழுத்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். மதியம் 2:00 மணிக்கு சாக்கை வார்த்தல் நடந்தது. பக்தர்களுக்கு கூழ் விநியோகிக்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு மேலதாளம் முழங்க கும்பம் கூட்டும் வைபவம் நிகழ்ந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.