போத்தனூர்: சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோடு, குரும்பபாளையம் பிரிவு அருகே பிருந்தாவன் வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு, மாணவர்கள் கிருஷ்ணரின் அவதாரங்களை நடனம் மூலம் வெளிப்படுத்தினர். கிருஷ்ண ஜெயந்தியின் உட்கருத்தை குசேலர் நாடகம் வாயிலாக நடித்து காட்டினர்.
தொடர்ந்து ராதை, கோதை வேடமிட்டு மாணவியர் நடனமாடினர். கிருஷ்ணர் வேடமிட்ட மாணவர், உபதேசம் செய்து அனைவரின் பாராட்டை பெற்றார். இறுதியாக உரி அடித்தல் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் வனிதா பரிசு வழங்கினார், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி குழும அறங்காவலர் திருமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். |