ஆலங்குடி பெரியவாள் என்று மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர் பிரகாசானந்த சரஸ்வதி சுவாமி. வேதத்தின் சாரமான பாகவதத்தை மக்கள் மத்தியில் பரப்பும் தெய்வீகப்பணியில் ஈடுபட்டவர். காவிரிக்கரையில் இருக்கும் நன்னிலம் முடிகொண்டான் கிராமத்தில் 1935ல் நரசிம்மஜெயந்தியன்று சித்தியடைந்தார். இங்கு அதிஷ்டானம் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. இந்த ஆண்டு 77வது வார்ஷீக ஆராதனை மே27ல் தொடங்குகிறது. அன்று இரவு 7மணிக்கு ரங்கசுவாமி சோமயாஜி பாகவத உபன்யாசம் நிகழ்த்துகிறார். மே28 முதல் ஜுன் 2 வரை கோபூஜை, பாகவத மூலபாராயணம், அஷ்டபதி சம்பிரதாய பஜனை,விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், டோலோத்ஸவம் ஆகியவை நடக்கிறது. ஜுன்3 காலையில் அதிஷ்டான பூஜையும், மாலையில் சுவாமிகள் உற்சவமூர்த்தி புறப்பாடு, மங்கள ஆரத்தியும் நடக்கும். திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் முடிகொண்டான் உள்ளது. போன்: 04366 230 142.