அறிவு மிக்கவரை இவர் பெரிய பிருகஸ்பதி என்று சொல்வதுண்டு. வால்மீகி ராமனின் அறிவுத்திறத்தைக் குறிப்பிடும்போது, பிருஹஸ்பதி சமோ புத்யா என்கிறார். தேவகுருவான பிருகஸ்பதிக் குச் சமமான அறிவுடைய வர் என்பது இதன் பொருள். மக்கள் அனைவரும் பிருகஸ்பதி(தேவகுரு) போல ஞானம் கொண்டவராகவோ அல்லது வனஸ்பதி (காட்டில் உள்ள மரம்) போல அறியாமை பெற்றவராகவோ வாழ்வதற்கான காரணத்தை கூரத்தாழ்வார், தான் பாடிய ஸ்ரீஸ்தவத்தில் கூறியுள்ளார். செல்வத்திற்கு அதிபதியான திருமகளின் பார்வை ஒருவர் மீது பட்டால், அவருக்கு பிருகஸ்பதி போல ஞானமும், படாவிட்டால் மரம் போல நிற்கும் அஞ்ஞானமும் உண்டாகிறது. இதை லோகே பிருஹஸ்பதி வனஸ்பதி என்கிறார். செல்வச்செழிப்புக்கு மட்டுமின்றி, ஞானத்திற்கும் (அறிவு) திருமகளே ஆதாரம் என்பது அவரது கருத்து.