அவிநாசி: சிவபுரம் சைவ மகா சபை அறக்கட்டளை சார்பில் சொர்ணாம்பிகை உடனமர் ஆனந்த சொர்ணேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அவிநாசி சிவபுரம் சைவ மகா சபை அறக்கட்டளை சார்பில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தெற்கு பகுதியில் முதலை உண்ட பாலகனை மீட்ட தாமரை குளக்கரையில் அமைந்துள்ள சக்தி விநாயகர். சிங்காரவேலன் உள்ளிட்ட ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனமர் ஆனந்த சொர்ணேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று மங்கள இசையுடன் கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று காலை பஞ்சகவ்யம், தத்வார்ச்சனை, மூல மந்திரம், உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து சக்தி விநாயகர், சிங்காரவேலன் உள்ளிட்ட ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனமர் ஆனந்த சொர்ணேஸ்வரர் கோவில் கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தசாவதாரம், தசா தரிசனம், சிறப்பு அலங்காரம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சிவபுரம் சைவ மகா சபை அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.