* நாக்கை கட்டுப்படுத்து. உன் வாழ்வு நலமாகும். * அன்பே சிறந்த முதலீடு. எல்லோரிடமும் அன்பாக இருங்கள். * உடல்நலம் இல்லாதவன் சாப்பிட விரும்புவதில்லை. மனநலம் இல்லாதவன் கடவுள் மீது பக்தி கொள்வதில்லை. * கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் மனித சமுதாயம், விலங்குகளின் காடாக மாறி விடும். * பொருள் இல்லாதவனை ஏழை என்கிறது உலகம். உண்மையில் பேராசை கொண்டவனே ஏழை. * செடிக்கு வேலியிடுவது போல, மனதிற்கு வைராக்கியம் என்னும் வேலியை இடு. * கடவுளுடன் பேசுவது வழிபாடு. கடவுள் பேசுவதைக் கேட்பது தியானம். * வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளை கண்டு கலங்காமல், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள். * தன்னிடம் குற்றத்தையும், பிறரிடம் குணத்தையும் தேடுபவருக்கு நன்மை அதிகரிக்கும். * ஆயிரம் அறிவுரைகளை வழங்குவதைவிட, ஒரு பயனுள்ள செயலில் ஈடுபடுவது சிறந்தது. * கடவுளையும், மனிதனையும் இணைக்கும் பாலமே வழிபாடு. * ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும் போது கவலைகள் பறந்தோடி விடும். * எந்த பொருளும் அழிவதில்லை. அது வேறொன்றாக மாறிக் கொண்டேயிருக்கிறது.