பதிவு செய்த நாள்
03
செப்
2022
07:09
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே வி.குரும்பபட்டி நாகம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா மாவட்ட கவுன்சிலர் விஜயன் தலைமையில் நடந்தது.
விழாவையொட்டி முன்னதாக கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் மாவட்ட கவுன்சிலர் விஜயன் ஏற்பாட்டில் நடந்தது. ஆகஸ்ட் 31 முளைப்பாரி, தீர்த்தம் கன்னியாபுரத்திலிருந்து மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின் மங்கல இசை, விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்யாக வாசனம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, வாஸ்து பலி, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், சக்தி கலச பூஜை, உள்ளிட்ட நான்கு கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று தீர்த்த குடங்கள் யாக சாலை, கோவிலை சுற்றி வந்து கோவிலில் உச்சியில் உள்ள கும்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பல்களில் தீர்த்தம் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்ஷா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், ரத்தினகுமார், பழனிச்சாமி, நகரச் செயலாளர் ராஜ்மோகன், சாணார்பட்டி ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் சுந்தரம், துணைத் தலைவர் ராமதாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணன், தமிழரசி கார்த்திகைசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதைப்போலவே சாணார்பட்டி ஒன்றியம் அஞ்சுகுழிபட்டியில் ஊராட்சி சோழகுளத்துப்பட்டி ஆண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று கால பூஜை உடன் கும்பங்களின் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.