கண்டவராயன்பட்டி: திருப்புத்தூர் அருகே காரையூரில் காரை சாத்த அய்யனார் கோவிலில் செப்.7 ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இக்கோயிலில் அய்யனார், பெரிய கருப்பர், சின்னக் கருப்பர், அகோர வீரபத்திரர், மூல மலையாண்டி, தளவாங்காளி, நொண்டிக் கருப்பர், சேமக் குதிரைகள், பரிவார தெய்வங்களுக்கு திருப்பணி நடந்துள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் செப்.5ல் மாலை 4:00 மணிக்கு துவங்குகிறது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்து, செப்.7 ல் காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்.